நல்ல பிரச்சினைகள் வேண்டும்

அர்த்தமற்ற பிரச்சினைகளை நினைத்து எவரும் அலட்டி கொண்டால் ஆங்கிலத்தில் First World Problem என்று நகைச்சுவையாக சொல்வார்கள். அதன் அர்த்தம் உலகில் எத்தனையோ லட்சம் பேர் உண்மையான பிரச்சினையுடன் இருக்க செல்வந்த நாடுகளில் உள்ளவர்களிற்கு மட்டுமே சில விடயங்கள் பிரிச்சனையாக தெரியும்.

இந்த கணத்தில் எது உங்கள் மனதில் பிரச்சினையாக தெரிகிறதோ அது உங்கள் வாழ்க்கை நிலையை ஒரு தெளிவாக காட்டும் கண்ணாடி போலத்தான்.

உதாரணமாக நன்றாக உழைக்கும் ஒரு மருத்துவர் ஒருவருக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நேரங்கள் மன உளைச்சலை தரும், ஆனால் அது ஒரு நல்ல பிரச்சனை; வருமானம் காணாமல் இருப்பதை விட அதிக வரி செலுத்தும் நிலையில் இருப்பது எவ்வளவோ பரவாயில்லை.

ஒரு முறை சிறு குழந்தைகள் இருவருடன் விடுமுறையில் வேறு நாடு செல்ல விமான நிலையத்தில் இருந்தபோது உறவினர் கேட்டார், பிள்ளைகளுடன் வெளியே செல்வது கடினம் இல்லையா என்று. “கடினம் தான் விடுமுறையில் செல்ல வழியில்லாமல் இருப்பது அதை விட கடினம் என்பதால் இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் வாழ்கையை நினைத்து சந்தோஷபடுகிறேன்.” என்றேன்.

எது உங்களது பிரச்சனை இப்போது?

 

One Response

Leave a Reply