வலிகள் சொல்வது என்ன?

வலி என்பது இயற்கையின்/கூர்ப்பின் அற்புதமான ஒரு ஏற்பாடு. வலியின் ஊடாக உடல் உங்கள் கவனத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வருகிறது. “இங்கே ஒரு முள்ளு குத்தி விட்டது கவனி” என்று சொல்லாமல் சொல்வது தான் வலி.

வலி இல்லாமல் விட்டால் எமது உடல் எத்தனையோ விதமாக பாதிக்கப்படும். வலி இல்லாத உலகில் உள்ளே எங்கோ எலும்பு முறிந்தது தெரியாமல் மனிதர்கள் குணப்படுத்த கூடிய காயங்களை பெரிதாக்கிக் கொள்வார்கள்; கடித்தது நச்சு விலங்கு என்று தெரியாமல் மாய்வார்கள்; உறங்கும் போதே சில விபத்துக்கள் மனிதரை கொல்லும்.

வலி இயற்கை தந்த ஒரு வரம்.

உடல் சார்ந்த வலி மட்டும் அல்ல, மனதில் வரும் வலி அப்படி தான் போல. எமது கவனத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வந்து ஏதாவது செய் என்ற அலறல் தானா மனதின் வலிகள்.

மனதில் வரும் வலிகள் பல தரப்பட்டவை. கவலை, சோகம், கோபம், பொறாமை என்று அடுக்கி கொண்டு போகலாம். கவனம் செய்ய நேரம் இல்லாமல் போகும் வாழ்வில் உன் கவனத்தை எதுவோ வேண்டி நிற்கிறது என்பது தான் மனதின் வலிகள் சொல்கிறது.

 

Leave a Reply