உணர்ச்சிகள் ஆபத்தானவை!

சரி. தலையங்கம் கொஞ்சம் பிழையானது தான். எல்லா உணர்சிகளும் ஆபத்தானவை அல்ல. சில உணர்ச்சிகள் சில இடங்களில் ஆபத்தானது. கையில் துப்பாக்கியுடன் இருப்பவன் முன்னால் வெற்று கையுடன் நின்று கோபம் கொள்வது புத்திசாலித்தனமான காரியம் அல்ல.

சரியான இடத்தில் சரியான அளவில் கோபம் கொள்வது ஒரு கலை. கூர்ப்பு, கோபம் என்ற ஒன்றை எமக்கு தந்தது ஒரு காரணத்துடன் தான்.

நான் இங்கு சுட்டிக்காட்டும் உணர்ச்சிகள் என்பது, அடுத்தவனால் தூண்டப்படும் உணர்ச்சி. பெரும்பாலும் அரசியல்வாதிகள் இதிலே கை தேர்ந்தவர்கள். உணர்ச்சியை வைத்து அரசியல் செய்யும் போது காரனங்களிட்கு தேவை அற்று போகிறது.

ஏன்? எவை? எப்படி? எவ்வாறு? என்று எந்த விளக்கமும் கொடுக்காமல் உணர்ச்சி அரசியல் செய்ய முடியும். தமிழன் உனக்கு இருக்கும் ஒரே நாட்டையும் எடுக்க போகிறான் என்ற சிங்கள உணர்ச்சி அரசியல், இலங்கை மக்கள் லட்ச கணக்கில் கொல்லபட காரணமாயிற்று. இவ்வளவு அழிவின் பின் கூட அந்த உணர்ச்சி அரசியல் அந்த தீவை விட்டபாடில்லை. இன்று அது புது எதிரி ஒன்றை உருவாக்க நிற்கிறது.

அரசியல் மட்டும் அல்ல. உணர்சிகளை தூண்டுதல் ஒரு வியாபார தந்திரம் கூட, என்ன இங்கே கொஞ்சம் வெளிப்படையாக தெரியாது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இந்த மலிவு விற்பனை என்பது ஒரு உணர்ச்சி சம்பந்தபட்ட விடயம். எம் அறிவு விழிக்க முன் எம் உணர்ச்சி இந்த சந்தர்பத்தை விடக்கூடாது என்று எம்மை விரட்டும்.

இன்று செய்தி ஊடகங்கள் கூட உணர்ச்சிகளை வைத்து தான், கடை நடத்துகிறார்கள். தொடர்ச்சியாக செய்திகளை பின்பற்றி வரும் ஒரு மனம் அமைதியாக இருப்பது மிக கடினம்.

நான் எல்லாம் இப்போது வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே செய்திகளை பார்ப்பது என முடிவு செய்திருகிறேன். என்னால் மாற்ற முடியாத விடயங்களை நினைத்து மனதை குழப்பி கொள்வதை விட, என்னால் மாற்ற கூடிய விடயங்களில், சிறிதாக இருந்தாலும் மனதை செலுத்துவது நல்லது என்பது என் எண்ணம்.

உணர்ச்சிகளை உங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்க முயலுங்கள், அது ஒரு அருமையான வாழும் கலை.

 

Leave a Reply