வாழ்க்கை – ஒரு கூருரமான நகைச்சுவையா?

பிறப்பு என்பது எவர் கையிலும் இல்லாத ஒரு விடயம். எப்போது எவருக்கு எங்கே பிறந்தோம் என்பதை நாம் தீர்மானிக்கவில்லை? ஆனால் அந்த பிறப்பின் விளைவுகள் தான் நம் வாழ்க்கை.

ஒரு குழந்தை சேரியில் வறுமையின் பிடியில் பிறக்கிறது, இன்னொன்று செல்வத்தில் திளைக்கும் குடும்பத்தில் பிறக்கிறது.

பலர் இந்த இரண்டு துருவங்களிட்கும் இடையில் ஒரு குடும்ப பின்னணியை கொண்டிருக்கிறோம்.

இதைவிட இயல்பான அறிவு, உடலில் குறைகள் இன்றி பிறத்தல், ஓரளவுக்கு அமைதியான நாட்டில் பிறத்தல் என்பதெல்லாம் எமது வாழ்க்கை பாதையை தீர்மானிக்கும் காரணிகள்.

சில பேருக்கு வாழ்க்கை கூருரமான நகைச்சுவை போல வந்து அமையும்.

மிக புத்திசாலித்தனத்தை கொடுத்த வாழ்க்கை அந்த இயற்கை கொடுத்த அறிவை பயன்படுத்த முடியாத ஒரு சூழலில் தள்ளினால் அந்த வாழ்க்கை ஒரு கூடுர நகைச்சுவையாக தான் இருக்கும்.

கனடாவின் பெரிய தொலைதொடர்பு சேவையை ஆரம்பித்தவர் தனக்கு பின் அந்த நிறுவனத்தை நடத்தும் பொறுப்பை தனது மகனிடம் கொடுக்காமல் வேறு ஒருவரிடம் கொடுத்து இருந்தார்.
அந்த மகனையும் குடும்ப நிறுவன நடப்புகளையும் பற்றி ஒரு நீண்ட கட்டுரை ஒரு பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது.

அந்த நிறுவனர் தன் மகன் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கவில்லை. தான் இருக்கும் போதே ஒரு முக்கியமற்ற ஓர் பகுதியையே மகனின் பொறுப்பில் விடடிருந்திருக்கிறார்.

மகன் பெரிய அளவில் திறமை வாய்ந்தவர் அல்ல என்பது தான் பொதுவான அபிபிராயம். அவரது சகோதரி கூட அவர் நல்ல பொறுப்பில் வருவதை விரும்பவில்லை.

இது கூட ஒரு வாழ்க்கையின் ஒரு கூடுர நகைச்சுவை தான். ஒரு நல்ல நாட்டின் மிக செல்வந்த குடும்பத்தில் பிறக்க கிடைத்த வரம் நல்ல திறமை என்ற கொடுப்பினை இல்லாத காரணத்தால் தன் சுற்றத்தில் மதிப்பிழந்து தெரிவது கூட ஒரு வகையில் கொடுமைதான்.

 

Leave a Reply