மணி கட்டிய மாடுகள்

மணி கட்டின மாட்டின் மேலே

“மணி கட்டின மாடு சொன்னாத்தான் கேட்பார்கள்”. இதை பழமொழி என்று சொல்லலாமா தெரியாது.

ஆனால் சில இடங்களில் இதை நகைச்சுவையாக பயன்படுத்துவார்கள்

இது ஒரு வட்டார வழக்காக இருக்கக்கூடும்.

மணி கட்டின மாடு என்று சொல்லும் போது உண்மையில் மாட்டை குறிக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.

மணி கட்டிய மாடு என்பதை வரையறுப்பது கடினம்

அது இடத்துக்கிடம் வேறுபடும்.

ஒரு நாட்டுக்குள்ளேயே சமூகங்களுக்கு இடையில் வேறுபாடு இருக்கலாம்.

எல்லா சமூகத்திலும் நமது தமிழ்ச் சமூகம் போல மணி கட்டிய மாடு சொல்வதை மந்திரமாக எடுத்துக் கொள்ளும் தன்மை இருக்கின்றதோ தெரியாது.

மணி கட்டிய மாட்டை வரையறுப்பது கடினம் ஆனால் உங்களுக்கு முன்னுக்கு வந்தால் ஓரளவுக்கு அடையாளம் கண்டு கொள்ளலாம்.

மணி கட்டிய மாடு என்பது ஒருவர் நினைத்து வருவது அல்ல இது மற்றவர்களால் தரப்படும் ஒரு அங்கீகாரம் போன்றது.

மணி கட்டியமாடு என்ற அங்கீகாரத்தால் என்ன நன்மை என்று எனக்கு தெரியாது

கனடாவின் தமிழ்ச்சமூகத்தில் ஒரு மணி கட்டிய மாடு என்ற அங்கீகாரம் வேண்டும் என்று விரும்பினா இந்த அறிவுரையை பயன்படுத்தலாம்.

  • பொது இடத்தில் தமிழில் கதைக்கக் கூடாது
  • தடக்கி தடக்கி தமிழ் கதைத்து தமிழறிவு பெரிதாக இல்லை உறுதிப்படுத்துவது இன்னும் நல்லது.
  • நடை உடை பாவனைகளில் நாகரீகத்தை காட்ட வேண்டும். சுருக்கமாச் சொன்னா உங்கள பார்த்தா சராசரி தமிழனாக தெரியக்கூடாது
  • பொது இடங்களில் தமிழில் கதைப்பவர்களை கண்டால் தூர விலகி நிக்க வேண்டும்
  • கனேடிய அமெரிக்க விளையாட்டு ஒன்றின் தீவிர ரசிகராக காட்ட வேண்டி இருக்கும். பாஸ்கெட்பால் பேஸ்பால் ஹாக்கி இதுல ஏதாவது ஒன்றை பற்றி கொஞ்சம் விஷயம் தெரிந்திருக்க வேண்டும்
  • நல்லதொரு கார் வைத்திருக்க வேண்டும். அதை அடிக்கடி கழுவி வடிவாகவும் வைத்திருக்க வேண்டும்.
  • தமிழ் படம் பார்க்கலாம் ஆனா தமிழ் பாட்டு கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை தமிழ் பாட்டு கேட்காம இருக்கிறது கொஞ்சம் நல்லம்.
  • நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட எங்க வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியம்.

நீங்கள் மெக்டொனால்ட்ஸ் ceo இருக்கிறதைவிட ibm இல துடைக்கிற வேலை செய்தாலும் ibm என்று சொல்றது ல அங்கீகாரம் கூட.

 

இப்படி இருந்தா உங்களுக்கு சம்பந்தமில்லாத விடயத்தில் கூறும் அறிவுரையை கூட வேதம் போல ஏற்றுக் கொள்வார்கள் சிலர்.

நூறு வீதம் தமக்கு தெரிந்த ஒரு விடயத்தை பற்றி ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னாலும் அவரது வெளித்தோற்றம் மற்றவர்கள் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை அதிகம் தீர்மானிக்கிறது.

இதற்குப் பின்னான உளவியல் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பல தடவைகள் இதை அவதானித்திருக்கிறேன்.

அதற்காக மணிகட்டிய மாடு என்று ஒருவரும் நினைத்து வருவதில்லை அப்படி இருப்பவர்களில் எந்தப் எந்தபிழையும் இல்லை.

மற்றவர்களின் வெளித்தோற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் குணத்தை தான் இங்கே நான் சுட்டிக் காட்டுகிறேன்.

 

Leave a Reply