ஆங்கிலம் பேசு!

சிக்கலான, மாற்றங்கள் வேகமாக நடக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு தொழிலோ, கற்கை நெறியோ நிரந்தரமானது, வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது.

வாழ்க்கை மிக எளிமையாக இருந்த ஒரு காலத்தில், அவ்வாறல்ல; உதாரனத்திட்கு ஒரு கற் கால மனிதன் தன் வாழ்க்கையை கொண்டு நடத்த என்ன தேவைபட்டிருக்கும்
மரம் செடி கொடிகளை பற்றிய அறிவு – எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்ற அறிவு, மிருகங்களை பற்றிய அறிவு, எப்படி அவற்றை வேட்டையாடலாம் என்ற அனுபவம் என்பதற்கப்பால் அவன் கையில் ஒரு கூரிய கல் ஆயுதம் அவன் வாழ்வதற்கான சாத்தியகூறுகளை பன்மடங்கு அதிகரித்து இருக்கும்.

மனித நாகரிகம் முன்னேற முன்னேற அறிய வேண்டிய விடயங்களும் கூடி கொண்டே செல்கிறது.

இன்றைய காலத்தின் “ஒரு கூரிய கல் ஆயுதம்” எது? எந்த துறை சார் அறிவு எல்லா இடத்திலும் பயன்படுத்த கூடியது? எது ஒருவளின் ஏற்கனவே இருக்கும் திறமையை பன்மடங்கு அதிகரிக்கும் வல்லமை உள்ளது.

என்னை பொறுத்த வரையில் அது ஆங்கில அறிவு தான் என்பேன்.

நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்ல ஆங்கில அறிவு உங்களை மேலும் வளர்த்து கொள்ள பல வழிகளில் உதவும். ஒவ்வொரு நிமிடமும் ஆயிரகணக்கான தரமான கட்டுரைகளும், வீடியோ களும் ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருகின்றன. Quora, Reddit, news.ycombinator போன்ற தளங்களில் ஆரோக்கியமான மனதை விரிவாக்கும் உரையாடல்கள விரவி கிடக்கின்றன. லட்ச கணக்கான ஆங்கில புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்டுகிறன.

பரவலான ஆங்கில அறிவின்மிக முக்கியமான விளைவு, தமிழ் செழிப்பாகும். ஆங்கிலம் ஒரு மேல் தட்டு மொழி ஆக இருக்கும் பொது தான் அது ஏதோ அருமையானதாக தெரியும். எல்லோருக்கும் அது தெரியும் போது; தெளிவான ஆங்கில கலப்பிலாத தமிழ் அருமையாக ஒலிக்கும். எனது ஐந்து வயது மகன் கனடாவில் தெளிவாக தமிழ் கதைக்கும் போது, ஏதோ அவன் வித்தை காட்டியது போல விரியும் விழிகளை பார்த்திருக்கிறேன்.

எவ்வாறு ஆங்கில அறிவை வளர்த்து கொள்வது.

1. முதல் செய்ய வேண்டிய வேலை உங்கள் ஆங்கில அறிவின் நிலையை அறிந்து கொள்வது.
Common European Framework of Reference for Languages (CEF or CEFR) என்ற அமைப்பு மொழி அறிவை 6 நிலைகலாக பிரித்திருக்கிறது.
A1, A2, B1, B2, C1, C2
A1 என்பது தொடக்க நிலை. C2 என்பது மிக தேர்ந்த நிலை.

A1 (Beginner)
Can understand and use familiar everyday expressions and very basic phrases aimed at the satisfaction of needs of a concrete type.
Can introduce him/herself and others and can ask and answer questions about personal details such as where he/she lives, people he/she knows and things he/she has.
Can interact in a simple way provided the other person talks slowly and clearly and is prepared to help.

A2 (Elementary English)
Can understand sentences and frequently used expressions related to areas of most immediate relevance (e.g. very basic personal and family information, shopping, local geography, employment).
Can communicate in simple and routine tasks requiring a simple and direct exchange of information on familiar and routine matters.
Can describe in simple terms aspects of his/her background, immediate environment and matters in areas of immediate need.

B1 (Intermediate English)
Can understand the main points of clear standard input on familiar matters regularly encountered in work, school, leisure, etc.
Can deal with most situations likely to arise whilst travelling in an area where the language is spoken.
Can produce simple connected text on topics which are familiar or of personal interest.
Can describe experiences and events, dreams, hopes & ambitions and briefly give reasons and explanations for opinions and plans.

B2 (Upper-Intermediate)
Can understand the main ideas of complex text on both concrete and abstract topics, including technical discussions in his/her field of specialisation.
Can interact with a degree of fluency and spontaneity that makes regular interaction with native speakers quite possible without strain for either party.
Can produce clear, detailed text on a wide range of subjects and explain a viewpoint on a topical issue giving the advantages and disadvantages of various options.

C1 (Advanced English)
Can understand a wide range of demanding, longer texts, and recognise implicit meaning.
Can express him/herself fluently and spontaneously without much obvious searching for expressions. Can use language flexibly and effectively for social, academic and professional purposes.
Can produce clear, well-structured, detailed text on complex subjects, showing controlled use of organisational patterns, connectors and cohesive devices.

C2 (Proficiency)
Can understand with ease virtually everything heard or read.
Can summarise information from different spoken and written sources, reconstructing arguments and accounts in a coherent presentation.
Can express him/herself spontaneously, very fluently and precisely, differentiating finer shades of meaning even in more complex situations.

2. அடுத்த நிலையை நோக்கி தயார் செய்வது.
எவ்வளவு குறைவான நிலையில் இருக்கிறீர்களோ அவ்வளவு வேகமாக அடுத்த நிலையை அடைய முடியும்.
நான் கனடாவில் 13 வருடங்கள் வாழ்கிறேன், கனடா பல்கலைகழக பட்டம் பெற்று இருக்கிறேன், என் நிலை B1 ஆக தான் இருக்க கூடும். நான் அடுத்த நிலைக்கு போவதற்கு பகீரத முயற்சி செய்து வருகிறேன்.

A1 நிலையில் இருப்பவர்கள்  வாசிப்பு மற்றும் அன்றாட பாவனை என்ற இரண்டு முறைகளில் பயிற்சி செய்யலாம்.

அன்றாட பாவனைக்கான வசனங்கள் அறிந்து கொள்ள சில தளங்கள்
http://www.talkenglish.com/lessondetails.aspx?ALID=1
http://learnenglishteens.britishcouncil.org/skills/reading-skills-practice
https://www.englishclub.com/kids/stories/too-tiny-for-tea.htm

இது தவிர சிறுவர்களிட்கான ஆங்கில கதை புத்தகங்களை ஒவ்வொரு நாளும் படியுங்கள். உங்கள் சொல்லகராதி அளவை அதிகரித்து கொண்டே இருங்கள். சொற்களையும் வசனங்களையும் மனபாடம் செய்ய இந்த தளம் https://ankiweb.net/about நல்ல ஒரு வழி காட்டுகிறது.

நல்ல மன ஒழுக்கம் இருந்தால் மிக வேகமாக உங்கள் நிலையை உயர்த்த முடியும். எல்லா வளங்களும் இலவசமாக இணையத்தில் கிடைக்கும் இந்த காலத்தில் காசு செலவு செய்ய வேண்டிய தேவையே இல்லை. (இணைய வசதி இருக்கும் பட்சத்தில்).

தன்னை பொருளாதார, அறிவியல் ரீதியாக வளர்த்து கொள்ளும் எந்த சமூகத்தையும் அடுத்தவன் ஏய்த்து ஆள முடியாது.

 

Leave a Reply