இலகுவானது நன்மையானதா?

விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த குழந்தை ஆங்கிலத்தில் தன் தாயிடம் குறைபட்டு கொண்டது, இனிப்புகள் எல்லாம் உடலிற்கு ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு குழந்தையின் ஆசையாக மட்டும் அந்த கருத்து தென்படவில்லை, வளந்தவர்களிக்கு கூட ஆரோக்கியமானது என்று நினைப்பது எல்லாம் சற்று கடினமான காரியமாக தான் இருக்கிறது.

TV முன்னால் இருப்பது எளிது, ருசிக்கு சாப்பிடுவது எளிது, இன்டர்நெட் இல் நேரத்தை விரயமாக்குவது எளிது, மனதை அதன் போக்கில் போக விடுவது எளிது, பணத்தை செலவழிப்பது எளிது, மதுவிற்கு அடிமையாவது எளிது – புத்தகம் வாசிப்பது கடினம், உடல் பயிற்சி செய்வது கடினம், பணத்தை சேமிப்பது கடினம், மனத்தை கட்டுக்குள் வைப்பது கடினம்.

யோசித்தால் இப்படி பல விடயங்களை அடுக்கி கொண்டே போகலாம். செய்வதிக்கு இலகுவானது எமக்கும் நன்மையான விடயம் என்று குறிப்பாக எதுவும் மனதில் தோன்றவில்லை.

இது மனம் சம்மந்தபட்டது.

கடினமானவற்றை அடிக்கடி செய்யுங்கள் அவை தான் நல்ல வாழ்கைக்கான அடிக்கற்கள்.

 

One Response

Leave a Reply