Unequal childhood என்ற ஒரு புத்தகம். அமெரிக்காவில் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி நடத்தியவர்கள் எழுதியது.
இந்த ஆராய்ச்சி ஏறத்தாள 25 ஆண்டுகளிற்கு முன்பு நடத்த பட்டிருகிறது. தேர்ந்து எடுக்கப்பட்ட நான்காம் வகுப்பு படித்த சிறுவர்களின் வீட்டில் இந்த ஆராய்சியாளர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை அறிய கூடிய வகையில் சில காலம் இருந்திருகிறார்கள்.
அவர்ககளை நடுத்தர வர்க்கம், வேலைபார்க்கும் வர்க்கம் மற்றும் ஏழைகள் என்ற மூன்று பகுப்பாக பிரித்து அந்த சிறார்களிட்கு கிடைத்த வாய்ப்புகள் என்ன, அவர்கள் குடும்ப நிலைமை எவ்வாறு அவர்கள் வாழ்க்கையை தீர்மானிகிறது என்பது தான் ஆய்வு.
ஆய்வு நடத்தி அவர்கள் அவதானித்த விடயத்தை இந்த புத்தகத்தின் முதல் பதிப்பில் வெளியிட்டு இருந்தார்கள். நான் படித்தது இரண்டாவது பதிப்பு.
இதில் பல ஆண்டுகளிற்கு பின்பு, தற்போது வளர்ந்து இருந்த அந்த முன்னைய சிறுவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் எழுதி இருக்கிறார்கள்.
தமிழ் படங்களில் வருவதை போல எதுவும் நடக்கவில்லை. நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்ட பிள்ளைகள் நல்ல பாதையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். வாய்ப்பும் வசதியும் இல்லாத சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் போலவே அதே கடினமான பாதையை விட்டு வர முடியவில்லை.
இது அமெரிக்காவில் நடந்திருந்தாலும் இளமையில் வறுமை என்பதை ஒரு மூன்றாம் மனிதனாக வாசிக்கும் போது மனதிற்கு கஷ்டமாக தான் இருக்கிறது. உழைப்பு என்பது ஒரு அளவிற்கு தான் கை கொடுக்கும் ஆனால் ஒருவரது குடும்ப நிலை அதற்கும் மேலாக உதவி செய்யும் என்பதை மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது.
ஆனால் அது தான் உண்மை.
வாழ்க்கை என்பது ஒரு சுழற்றி வீசப்பட்ட பகடை (தாயம்) போல, எமக்கு கிடைக்கும் அறிவு, பெற்றோர், நாடு, பிறந்த வருடம், நோய் நொடி எல்லாம் எங்கள் கையில் இல்லாத விடயங்கள், ஆனால் அவை எங்கள் வாழ்க்கை போக்கை மிக பெரிய அளவில் தீர்மானிகின்றன.
அப்படி என்றால் எங்கள் கையில் எதுவுமே இல்லையா என்று ஒரு விரக்தி தோன்றுமே?
அப்படி அல்ல. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேறியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விதிவிலக்கு தான் ஆனாலும் எத்தனையோ பேர் அந்த விதிவிலக்கு பட்டியலில் சேர முடியும்.
என்னை பொறுத்த வரையில் “தன்னை அறி” என்பதே வாழ்க்கை பாதையின் முதல் படி. சொல்லும் போது ஏதோ முன்னேற்ற கட்டுரை போல இருந்தாலும், அதை அறிந்து கொள்ளாமல் தடம் மாறி தெரியும் பலரை பார்த்திருகிறேன்.
தன் பலம், பலவீனம், தன் சுற்றம், மொத்தத்தில் தான் யார் என்று தெளிவு கொண்டவனிற்கு வாழ்க்கையை முன்னே கொண்டு செல்வது எளிது.
Leave a Reply