ஜகார்த்தா நகரம் கடலில் மூழ்கின்றது

இன்று ஒரு செய்தி வாசித்தேன் அதிலே ஜகார்த்தா நகரம் எவ்வாறு கீழே சென்று கொண்டிருக்கின்றது என்பதை பற்றி எழுதியிருந்தார்கள்.

2050 ஆம் ஆண்டளவில் இந்த நகரம் முற்றுமுழுதாக கடலில் சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய அரசாங்கம் இந்தோனேஷியாவின் தலைநகரை வேறொரு இடத்துக்கு மாற்றுவது பற்றி சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்

இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவது தான்.

ஒரு வளர்ந்து வரும் நாட்டின் நீர் தேவை என்பது இலகுவாக வேறு வழிகளில் தீர்க்கப்படக் கூடியது அல்ல. கடந்த பத்து வருடங்களாக இந்த பிரச்சினை பற்றி அறிந்திருந்த போதும் இந்தோனேசியா அரசாங்கத்தால் ஒரு காத்திரமான மாற்றீடு ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் வருடத்திற்கு 10 அங்குலங்கள் கீழே போய்க் கொண்டிருக்கும் ஜகார்த்தா வை விட உலகில் வேறு பல இடங்கள் மிக வேகமாக நிலத்தில் சென்று கொண்டிருக்கின்றன

இதற்கு நீ நிலத்தடி நீர் பாவநை மட்டும் காரணம் அல்ல வேறு பல காரணங்களாலும் இது உலகின் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது.

காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வது ஒரு ஒரு வலுவான காரணி அது ஜகார்த்தா பிரச்சினையை இன்னும் தீவிரமாகி கொண்டிருக்கின்ரது.

இதைப்பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போது இன்னுமொரு ஒரு நல்ல செய்தி பார்க்கக் கிடைத்தது இது இஸ்ரேல் நாட்டில்( இது ஒரு பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு நாடு) பல வருடங்க லாக தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீப காலத்தில் அவர்கள் தமது தேவைக்கும் அதிகமான அளவில் தண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள் ( உற்பத்தி என்பதுதான் சரியான ஒரு பதமாக இந்த இடத்தில் அமையும் ஏனென்றால் )கடல் நீரிலிருந்து தண்ணீரை உருவாக்கும் ஒரு செலவு குறைந்த ஒரு முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம் இவர்கள் உற்பத்தி செய்கிற தண்ணிர் இவர்கள் தேவைக்கும் அதிகமாக இருப்பதால் இவர்கள் கூடுதலாக உள்ள தண்ணீரை யாருக்கு கொடுப்பது என்பதை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அந்த செய்தி.

அறிவியல் வளர்ச்சி என்பது ஒரு காலத்தில் மிக தீர்க்கமுடியாத சவாலாக இருந்த பல பிரச்சனைகளை இல்லாமல் செய்து இருக்கின்றது.

இந்த இஸ்ரேல் பற்றிய செய்தி கூட அதை நினைவுபடுத்தும் ஒரு நல்ல செய்தி.

 

Leave a Reply