மாயன் நாகரிகத்தின் எச்ச சொச்சங்கள் இன்றைய மெக்ஸிகோ, பெலிஸ், குவாட்டமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.
ஆசிய, ஐரோப்பிய நாகரீகங்கள் அளவிற்கு வளர்ச்சியடைந்த நாகரீகம் இல்லாவிட்டாலும், ஸ்பானியர்கள் வரும்வரைக்கும் இன்றைய தென் அமெரிக்க கண்டத்தின் கணிசமான பகுதியை மாயாக்கள் ஆண்டிருக்கிறார்கள். ஸ்பானியர்கள் எதிர்கொள்ளும் வரை மாயா நாகரிகம் ஆயிரம் வருடங்களிட்கு மேலாக இருந்திருகிறது.
பல ஆண்டுகால போர்களிட்கு பின்பு ஏறத்தாள கி.பி 1697 அளவில் ஸ்பானியர்கள் இவர்களை முற்று முழுதாக தங்கள் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தார்கள்.
சமீபத்தில் மெக்ஸிகோ பயணித்தின் போது மாயா நாகரிகத்தின் பண்டைய இடிபாடுகள் சிலவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
‘சிச்சேன் இட்சா’ மற்றுன் ‘தூளும்’ என்ற இரண்டு பழைய மாயா நகரங்கள் இன்று புகழ் பெற்ற சுற்றுலா மையங்கள்.
சிச்சேன் இட்சா வில் உள்ள எல்காஸ்டில்லோ என்று அழைக்கபடும் இந்த கோயில் ஒரு உலக அதிசயமாக கருதப் படுகிறது. சிச்சேன் இட்சா கி.பி 600 ம் ஆண்டளவில் முக்கியத்தவம் அடைந்த இடமாக மாறியிருக்கிறது.
இந்த சுவர் நகரம் ச்பநியர்களுடனான யுத்தங்களில் கடைசி வரை தாக்குப்பிடத்த ஒரு இடமாக கருதப்படுகிறது.
ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளை வெற்றி கொண்ட போதும் நாம் முற்று முழுதாக அழிந்து போகவில்லை. எமது கலாசாரம், மொழி மட்டும் அல்லாது ஆட்சி அதிகாரங்களை கூட பெரிய அளவில் மீள பெற்று கொண்டுளோம்.
ஆனால் புதிய உலகம் என்று கருதப்பட்ட அமெரிக்க கண்ட நாகரீகங்கள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு ஐரோப்பிய கலாச்சரதிட்குள் உள்வாங்கபட்டுள்ளன.
இதற்கு காரணம் பழைய அமெரிக்க நாகரீகங்கள் தொழில் நுட்பத்தில் ஆக்கிரமிப்பாளர்களை விட மிக பின்தங்கி இருந்தது ஒரு சிறிய காரணம் மட்டுமே என்றும் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து வந்த நோய்கள் தான்பெரிய காரணம் என்றும் Guns, Germs, and Steel என்ற நூலில் Jared Diamond வலுவான ஆதாரங்களை முன் வைக்கின்றார்.
பல ஆயிரம் ஆண்டுகள் வெளி உலகுடன் தொடர்பில்லாது இருந்த பழைய அமெரிக்க கண்ட மக்கள் அறிவு பகிர்வு மட்டும் அல்ல நோய் பகிர்வு என்ற வாய்ப்பையும் இழந்திருக்கிறார்கள். இதனால் ஐரோப்பியர்களின் நோய்களிற்கு அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கவில்லை. ஐரோப்பியர்களுடனான தொடர்பின் பின் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோயால் சடுதியாக இறந்திருக்கிரார்கள். இது ஐரோபியர்களிட்கு பெரிய ஒரு வரபிரசாதகமாக அமைந்து அவர்களை எளிதாக அழிக்க கூடியதாக இருந்துள்ளது.
Leave a Reply