உரையாடலின் நடுவே நண்பர் ஒருவர் சாதாரணமாக ஒரு கருத்தை சொன்னார். அவர் தொடர்ந்து கதைத்து கொண்டு இருந்தாலும் அந்த கருத்தை பற்றியே என் எண்ணம் சுற்றிய படி இருந்தது. வேறு எதுவும் தலைக்குள் போகவில்லை.
“வாசிப்பதால் என்ன பிரயோசனம்? எல்லா தகவல்களும் தேடு தொலைவில் இணையத்தில் இருக்கும் பொது ஏன் காலத்தை வீணடித்து புத்தகங்களை வாசித்து எல்லவற்றையும் தலைக்குள் வைத்திருக்க வேண்டும்?”
இது தான் அவரது கருத்து. அந்த நேரத்தில் அதை மறுதலித்து கதைக்க வரவில்லை. அவர் சொன்னதில் நியாயம் இருக்ககூடும் என்று பாதி மனம் ஏற்று கொண்டது போலத்தான்.
சமிபத்தில் mental models என்பதை பற்றி ஒரு கட்டுரை தட்டுபட்டது. mental model என்பது இந்த இடத்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட கருத்து அல்லது புரிதல் என்ற பொருள் கொள்ள படுகிறது.
சில mental model எமக்கு கல்வி ஊடாக கிடைக்கிறது. இரசாயனம், பௌதிகவியல், பொறியியல் என்று எந்த துறையை எடுத்தாலும் பல mental model இற்கான உதாரணங்களை காட்ட முடியும்.
நாங்கள் ஒவ்வொருவரும் பல் வேறு mental model களை வைத்தே வாழ்கையில் பல முடிவுகளை எடுக்கிறோம். இந்த mental model கள் நாம் அனுபவத்தால் வளர்த்து கொண்டதாகவோ அல்லது குடும்ப, கலாச்சார செல்வாக்குகளால் உருவாக்க பட்டதாகவோ இருக்கலாம்.
எம்மை அறியாமலே நாம் உருவாக்கி வைத்திருக்கும், எமக்குள் இருக்கும் இந்த mental model கள் எங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன.
வாழ்க்கை என்பது நாம் இந்த கணம் வரை நாம் எடுத்த முடிவுகளின் ஒட்டு மொத்த விளைவு மட்டுமே.
ஒரு பரந்த mental model நல்ல முடிவு எடுக்கும் மனதிற்கான ஒரு அத்திவாரம் போல.
நல்ல முடிவுகள் ஒரு நல்ல வாழ்க்கையை நோக்கி எம்மை இட்டு செல்லும். இங்கே தான் வாசிப்பு என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
கவனமாக தேர்ந்தெடுத்த பல் துறை சார்ந்த புத்தகங்கள் வாசிப்பது ஒரு சிறந்த முதலீடு. ஒரு தரமான mental model ஐ வளர்ப்பதற்கான ஒரே வழி.
இல்லாவிட்டால் நாம் கடவுள் குற்றம், காலப் பிழை என்ற குறுகிய வட்டங்களிற்குள் நின்று தான் முடிவுகளை எடுத்து கொண்டிருப்போம்.
Leave a Reply