Assumption இற்கு தமிழ் அனுமானம் என்று தான் மனதிற்குள் வந்தது. கூகிள் கூட அப்படிதான் காட்டுகிறது. ஆனால்
“Most of our assumptions have outlived their uselessness.”
― Marshall McLuhan
என்ற quote ஐ தமிழ் இல் எழுதினால் அனுமானம் என்ற சொல் சரியான கருத்தை தருகிறதா?
ஆம் என்றும் வாதாடலாம் இல்லை என்றும் வாதாடலாம்.
நாம் ஒவ்வொருவரும் வாழ்கையில் பல assumptions ( அனுமானம்) ஐ வைத்து இருக்கிறோம். சிலர் சொல்வார்கள் சுத்து மாத்து பண்ணத் தெரிந்தவன் தான் நல்லா இருப்பான் என்று. இது அவர்களின் ஒரு assumption. அது உண்மை/பொய் என்பது வேறு கதை. ஆனால் அந்த அனுமானத்தின் அடிப்படையில் அவர்கள் பல முடிவை வாழ்கையில் எடுத்து இருப்பார்கள்.
நாம் அடிக்கடி கேள்விப்படும் மற்றவர்களின் அனுமானங்கள் சில
– படித்தவர்களிட்கு இப்ப எங்க மதிப்பு. காசு இருந்தால் தான் மதிப்பு.
– கதைக்க தெரிந்தவன் தான் பிழைப்பான்.
– IT படிச்சா வேலை கட்டாயம் கிடைக்கும்.
சில அனுமானங்கள் நாங்கள் வெளில சொல்வதில்லை ஆனா மனதிற்குள் ஆழமாக பதிந்து இருக்கும்.
– இங்கிலீஷ் இல் கதைத்தால் மதிப்பு கிடைக்கும்.
– Luxury காரில் வந்தால் பணக்காரன். (இது உள்நாட்டு வாழ்கையில் ஓரளவிற்கு உண்மை தான். வெளிநாடுகளில் தலைக்கு மேல கடனுடன் சில்லறை வேலை செய்து கொண்டு புத்தம் புது Benz இல் திரிபவர்கள் இருக்கிறார்கள்).
இவை பொதுவான அனுமானங்கள், எங்களிற்குள் சில தனித்துவமான அனுமானங்கள் கட்டாயம் இருக்கும். அந்த அனுமானங்கள் தான் எங்கள் ஒவ்வொருவரையும் வித்தியாசமான பாதைகளில் இட்டு செல்கிறது.
எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனிதர்களின் விசித்திரமான நடவடிக்கைகளை பார்த்து யோசித்து இருக்கிறேன் “ஏன் இவர்கள் இப்படி நடக்கிறார்கள்?” என்று.
அனுமானங்கள் (assumptions) தான். சில நேரங்களில் அப்பட்டமான பிழையாகத் தெரிந்தாலும், மனம் தடுமாறும் அவர்கள் நினைப்பது தான் சரியோ, நாம் தான் வாழத் தெரியாமல் இருக்கிறோமோ என்று.
சில அனுமானங்களை சரி பார்த்து கொள்ளலாம். எத்தனையோ ஆய்வுகள் எம் வாழ்க்கை முறை பற்றி மேற்குலகத்தில் நடக்கின்றன. பிள்ளை வளர்க்கும் முறை, கணவன் மனைவி உறவுகள் என்று எத்தனையோ வகையான அன்றாட அனுமானங்களை இந்த ஆயுவகளை வைத்து சரி பார்த்து கொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலான அனுமானங்கள் அப்படியல்ல. எம் மனத்திற்குள் ஆழ ஊடுருவி இருக்கும் இந்த அனுமானங்கள் தான் எம் எண்ணங்களை/முடிவுகளை, வாழ்க்கையை வழி நடத்துகின்றன.
இந்த வாழ்க்கை என்பது எங்கள் அனுமானங்களை சரி பார்க்கும் ஒரு பயணம் போலத்தான்.
அந்த பயணத்தின் முடிவு காலத்தில் எம் அனுமானங்கள் சரியா பிழையா என்று சீர் தூக்கி பார்த்து அதை மற்றவர்களிற்கு சொல்லும் தெளிவு வேண்டும்.
Leave a Reply