நிகழ்காலம் – எதிர்காலம்

இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஏராளமான தத்துவங்கள் வலம் வரும். அப்படி ஒரு பொன்னான கருத்து தான் “நிகழ்காலத்தில் வாழுங்கள் எதிர்காலத்தை நினைத்து உங்கள் மனதையும் உடலையும் வருத்திக் கொள்ளாதீர்” என்பது. சொல்லிற்கு சொல் இப்படியே இல்லாவிட்டலும் இந்த பொருள்பட பல தத்துவ வாதிகள் பலவற்றை பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இது வாழ்க்கைக்கு பயன்படும் ஒரு நல்ல கருத்தா? மேலோட்டமாக பார்க்கும் போது உண்மை போலத்தான் தெரிகிறது. ஆனால் இது ஒரு ஆபத்தான வாழ்க்கை கருத்து. உங்கள் பிள்ளை வீட்டு பாடம் செய்யாமல் இந்த தத்துவத்தை உங்களிற்கே சொன்னால் ஏற்று கொள்வீர்களா?

சரி. அது ஒரு அதீத ஒரு உதாரணமாக இருப்பதாக எடுத்து கொள்வோம்.

ஆங்கிலத்தில் மனோதத்துவ பதம் ஒன்று உள்ளது. Delayed gratification என்று. தற்போது கிடைக்கக் கூடிய ஒரு வெகுமதியை எதிர்காலத்தில் அதை விட கூட கிடைக்கும் என்பதற்கான சாத்தியத்திகாக விட்டு கொடுத்தல் என்பது இதன் பொருள் .

இது தொடர்பான பல மனோவியல் ஆராய்சிகள் நடத்தப்பட்டுள்ளன. Marshmallow Experiment என்பது கொஞ்சம் புகழ் பெற்ற ஒரு மனோவியல் பரிசோதனை. இதில் 4 வயது குழந்தைகள் பலரிடம் Marshmallow என்ற இனிப்பு உணவு இரண்டு கொடுக்க்கப்பட்டது. அதை சாப்பிட முன்னர் அந்த குழந்தைகளிடம் ஒரு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இனிப்பையும் உடனே சாப்பிடலாம் அல்லது சில நிமிடங்கள் கழித்து உண்ணலாம். ஆனால் சில நிமிடங்கள் கழித்து உண்பவர்களிட்கு இன்னும் இரண்டு இனிப்பு கூடுதலாக வழங்கப்படும்.

சில குழந்தைகள் உடனே அதை சாப்பிட்டு விட்டார்கள். சிலர் அடுத்த இரண்டு இனிப்புகளிட்காக காத்திருந்தார்கள்.

இந்த பரிசோதனை ஒரு வசிகரமான திருப்பம் எடுப்பது இருபது ஆண்டுகளிற்கு பின்பு. இருபது ஆண்டுகளிற்கு பின்பு அப்போதைய குழந்தைகள், இப்போது வாழ்வில் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்ந்த போது, அப்போது காத்திருந்த குழந்தைகள் இப்போது பொதுவாக ஒரு நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வது தெளிவாக காணக் கூடியதாக இருந்தது.

இந்த ஆய்வு சொல்வது என்ன? நாளை என்பது நிரந்திரம் இல்லை என்றாலும். நாளைய நன்மைக்காக இன்றைய இன்பங்களை தள்ளி போட தயாராய் இருப்பவர்கள் வாழ்வில் பொதுவாக நல்ல நிலையை அடைகிறார்கள் என்பதே.

பொறுமை, கடின உழைப்பு, மன அடக்கம் இவை தான் ஒரு தனி மனித, குடும்ப, சமூக, நாட்டு வளர்ச்சிக்கு தேவை, நாளை என்பது மாயை என்ற தத்துவங்கள் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் வாழ்க்கைக்கு பயன் தர போவதில்லை.

 

 

Leave a Reply